சுடும் ஈரம்
நெடுநாளா எழுத முடியாமல் போயிற்று.
இன்று நண்பர் ஒருவர் உதவியுடன் வலைப்பூவுக்குள் வந்துவிட்டேன்.
பெரிய எழுத்தாளன் இல்லை.. என்ன எழுத என்ற பின்குறிப்பும் இல்லை.
அதிகபட்சம் இது என் டைரியாகவோ அல்லது எனது புலம்பல்களாகவோ இருக்கலாம்.
இருக்கட்டும் எதுவாயினும்!
தொடங்கலாம்... முதலில்.
சுடும் ஈரம்!
வேகமான வாகனங்கள்... புழுதி பறக்கும் சென்னையின் சாலைகளில் நானும் ஒருவன். சென்னையில் ஏது புழுதி என்று கேட்கக் கூடாது. கிராமத்தில் கூட அவ்வளவு புழுதி கிடையாது. (ஏன்னா அங்க மாநகராட்சி மாந்தர்களின் குழி பறிக்கும் வேலை இல்லை) .
புண்ணியம் செய்த இந்த பூமியில் நமக்கு படியளக்கும் புண்ணியவானை பார்க்கும் வேகத்தில் இரு சக்கர வாகனத்தில் பறந்தேன். வடபழனி லக்ஷ்மன் ஸ்ருதியை கடந்துவிட்டால் ஏழு கடல் தாண்டிய மாதிரி.. அந்த ஏரியாவில் மொத்த வேகம் கூட்டினாலும் நத்தை மாதிரிதான் நகரமுடியும்.
ரோமியோக்களின் பைக்குகளுக்குமட்டும் என்ன ரெக்கையா முளைச்சிருக்கு.? பறக்குது. நானும் முண்டியடிச்சு அவனை முந்தி போயிடணும்னுதான் பாத்தேன். நடக்கல. நம்ம வண்டியில குதிரைத்திறன் கம்மி.ரெண்டு பேர் வண்டியில் போனாங்கன்னா பின்னாடி இருக்கிறவன் மேல எப்பவும் எனக்கு ஒரு கண்ணு இருக்கும். அவசரத்துல கொஞ்சம் மிஸ் பண்ணிட்டேன்.
பான் பராக்கை போட்டு துப்புனாம் பாருங்க. அவ்வளவு எச்சிலை தேக்கி வைக்க வாயி என்ன மிளகா வத்தல் குடோனா? அடிச்சது சாரல். நனைந்தேன் நானும் கொஞ்சம். தொடர்ந்து வந்த பத்து பேர் திட்டுறது அவன் காதுல ஏறவே இல்ல. அவன் வாயக் கழுவுன போதையில இருந்தான்.
நம்ம உள்குதிரை குதித்தது. கனைத்தது வாகனம். ஒரு வளைவில் முந்தினேன். சரியாக அவன் இடது புறம் நெருங்கி வர எச்சில் கூட்டி உமிழ்ந்தேன்.முகத்தில் சாரல் அடித்ததால் வெளிறி பார்த்தான் என்னை.
டேய் மயிரூ! நீ துப்புன கோவத்துல அந்த ஆளு எம் மேல துப்பிட்டு போறான் பாருங்க்ற சத்தம் மட்டும்கேட்டுச்சி.
ஈரம் சுடும்!

7 கருத்துகள்:
ஒப்பனிங்கே... அசத்தல்ன்ன ... நல்ல கிராமியமணம் கமழுது ... தொடர்ந்து எழுதுங்க ...
நல்லாயிருக்குங்க. வலைப்பதிவுக்கு வந்ததற்கு வாழ்த்துக்கள்.
ஆடுமாடு
வாங்க ஜான்...
நல்வரவு...
எஸ்.ஷங்கர்
தட்ஸ்தமிழ்
romba nalla irukunga, melum unga nalla karuthukkalai terivechitea irunga, nandri anitha
romba nalla irukkunga, melum unga nalla karuthukkalai tearivichutea irunga, nandri - Anitha
//பெரிய எழுத்தாளன் இல்லை.. என்ன எழுத என்ற பின்குறிப்பும் இல்லை.//
பெரிய்ய எழுத்தாளார்கள் வலையில் எழுதமாட்டாங்களே.
வருக வருக !
நிஜமாவே அந்த எச்சில் ஈரம் அவனைச் சுட்டிருக்கும்...
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு