சினேகாவுக்கு நிச்சயமா?
இன்னைக்கு காலை அஞ்சு மணிக்கு தான் வலைப்பதிவையெல்லாம் முடி
ஜீவாவின் கனவு என்பதாக "முத்திரை" படத்தை பற்றி சொன்னார் ஜீவாவின் மனைவி...
(^நானும் எனது குழந்தையுடன் சினேகா அவர்களும் )
என் நண்பர் இயக்குனர் ஸ்ரீநாத் நல்ல துரு துரு ஆளு. பாடல்கள் படமாக்கியிருந்த விதம் நன்றாகவே இருந்தது.
ஒரு விழாவை சீக்கிரம் முடிக்ககூடாதுங்கறதுக்கு நல்ல உதாரணம் முத்திரை ஆடியோ வெளியீடு.
மூன்று பேர் மட்டுமே பேசிய விழாவாகவும், மற்ற யாருமே பேச வைக்கப்படாததும்... தொலைக்காட்சி நண்பர்கள் திணற காரணமாக இருந்தது.
அந்த கூட்டத்தில் நின்று கொண்டிருந்தவனுக்கு நடிகை சினேகாவின் அழைப்பு வந்தது. (நான் அவங்க பி. ஆர். ஒ.) போனை எடுத்து காதில் வைத்தவனுக்கு அதிர்ச்சி கொடுத்தார் சினேகா. எங்க இருக்கீங்க... முகூர்த்தம் முடியறதுக்குள்ள வீட்டுக்கு வாங்க என்றார்.
என்ன முகூர்த்தம்? திடீர்னு? சொல்லுங்க என்ன சஸ்பென்ஸ்? என்றேன்..
பேசிக்கிட்டே நேரத்தை வீணாக்காதீங்க... உங்களால எவ்வளவு நேரத்து
அரை மணி நேரமாவது ஆகும்... ஏன்னா சத்யம் தியேட்டர் ஒரு மூலை. அவங்க வீடு இன்னொரு எண்ட். நா உங்களுக்கு நேத்தே சொல்லியிருக்கணும். சாரி... திடீர் முடிவுங்கறதால அண்ணா எல்லோரும் ஊர்ல இருந்து வந்ததால என்னால ஒண்ணும் பண்ண முடியலை.. அலைச்சல்...
எனக்கு நிச்சயதார்த்தம் ரகசியமா நடக்கு. வாங்க... யாருக்கும் சொல்லாதீங்க. குறிப்பா பத்திரிகைகளுக்கு என்றார். எனக்கு பதற்றம்... என்னடா இது... சினேகா திடீர் திடீர்னு இந்த மாதிரி விளையாடுவாங்க. அது மாதிரியோ என்ற சந்தேகம் வேற....
இருந்தாலும் அவங்களை சுத்தி மந்திரம் ஓதுற சத்தம். விழாவுக்கே உரித்தான சல சலப்பு... சந்தேகமேயில்லாம் இருக்குமோ என்ற பயத்துடன் அடிச்சி பிறக்கி பைக்கை எடுத்து பறந்தேன்... கிராஸ் பண்ணி போன வேகத்துல ,
கூட நின்ன தோழர்கள் மிரண்டு போனாங்க...
போக போக நாலைஞ்சு போனு...
என்னடா இந்த பொண்ணு இப்போதான் நிறைய படங்கள் கமிட் பண்ணி பிசியா இருக்கு... திடீர்ன்னு ஏன் அவசரம்னு தெரியலையேன்னு ஒரு பக்கம்...
சரி நம்மளுக்கு நடிகை கல்யாணமாகி போனா பொழப்பு போயிடுமோன்னு சுயநலமாவே சிந்திக்கிறோமேன்னு இன்னொரு பக்கம்...
இருந்தாலும் வெறுங்கையோடு போனா நல்லா இருக்காதுன்னு ஒரு புலி கம்பீரமா த்ரீ டி எப்பெக்டுல இருக்கிற மாதிரி வாங்கிகிட்டு தெரு முனையில நின்னு வீட்டை எட்டி பார்த்தேன். வெளியில் ஷாமியானா பந்தல். ஏகப்பட்ட அலங்காரம். கார்கள்... ஆஹா.... உண்மை தாண்டி... என்று படபடபோடு இருந்தாலும் சினேகா வீட்டுக்குள்ள இருந்து தம் அடிக்க கடை பக்கம் ஒதுங்கிய
ஒருத்தரை விசாரித்தேன்.
பக்கத்துல இருந்த ஃபேன்சி கடையில ரெண்டு ஸ்டிக்கர் வாங்கி கிஃப்ட் மேல ஒட்டி ஸ்கெட்ச் வாங்கி ஒரு வாசகத்தை கிறுக்கி வாசலுக்குள் நுழைந்தேன். சினேகா வாசலுக்கே வந்து வரவேற்றார். சினிமாவிலுருந்து யாரையும் கூப்பிடலை. ஆனா, உங்களை அப்படி விட முடியாதுன்னுதான் கூப்பிட்டேன்...
பக்கத்துல நின்ன அக்கா சங்கீதாவை கூப்பிட்டு, உள்ள அழைச்சிட்டு போய்
சரி கிஃப்ட் எனக்கு தானே கொடுங்க என்றார்.. இல்ல என்ன கிஃப்ட்ன்னு நீங்க பார்க்கும் ஆனா அவங்ககிட்ட தான் கொடுப்பேன் என்றேன். சினேகாவின் அம்மாவும், அப்பாவும் அவ்வளவு கூட்டத்திலும் என்னை பார்த்து சிரிச்சாங்க.
சரி வாங்க கொடுக்கலாம் என வீட்டுக்குள்ளிருந்த மெயின் ஹாலுக்கு அழைத்து போனார்.
இவங்க தான் இன்னைக்கி மாப்ள... கொடுங்க எங்க சின்ன அன்னிக்கு வளைகாப்பு... என்னா நல்லா ஏமாந்தீங்களா என்று சிரி சிரி என்று சிரித்தார். நான் ஒன்றுமே சொல்லாமல் கொஞ்சம் கிஃப்ட் மேல என்ன எழுதியிருக்கேன்னு பாருங்கன்னு சொன்னேன்...
பார்த்தால் ....
"புலிக்குட்டி
பிறக்க
வாழ்த்துக்கள்"..
என்று எழுதி இருந்ததை பார்த்தும் சினேகாவின் சிரிப்பு கோவமா மாறிச்சி.
சே! எப்படி ஜான் கண்டுபிடிச்சீங்க...
ஏமாத்தலாம்னு நினைச்சனே....
ஃபேன்ஸி கடை வரை ஏமாந்தது எனக்கு தானே தெரியும்.
நீங்களும் ஏமாந்திருந்தா சாரி....

