ஈரம் சுடும்

எனது புகைப்படம்
பெயர்: eeram sudum
இருப்பிடம்: tuty, maramangalam\ tamilnadu, India

normal living...

புதன், 21 ஏப்ரல், 2010

கோடை எழுதிய காலி பக்கங்களை
இனி ஈரம் தொட்டு துளிர்க்க வைக்கும்

வியாழன், 7 மே, 2009

சினேகாவுக்கு நிச்சயமா?


இன்னைக்கு காலை அஞ்சு மணிக்கு தான் வலைப்பதிவையெல்லாம் முடிச்சிட்டு போய் படுத்தேன். காலையில் ஒன்பது மணிக்கெல்லாம் சத்யம் தியேட்டர் போகவேண்டியிருந்ததால எட்டு மணிக்கே மீண்டும் எழுந்துட்டேன். பரபரப்பா கிளம்பி போனேன்.

ஜீவாவின் கனவு என்பதாக "முத்திரை" படத்தை பற்றி சொன்னார் ஜீவாவின் மனைவி...
(^நானும் எனது குழந்தையுடன் சினேகா அவர்களும் )

என் நண்பர் இயக்குனர் ஸ்ரீநாத் நல்ல துரு துரு ஆளு. பாடல்கள் படமாக்கியிருந்த விதம் நன்றாகவே இருந்தது.

ஒரு விழாவை சீக்கிரம் முடிக்ககூடாதுங்கறதுக்கு நல்ல உதாரணம் முத்திரை ஆடியோ வெளியீடு.

மூன்று பேர் மட்டுமே பேசிய விழாவாகவும், மற்ற யாருமே பேச வைக்கப்படாததும்... தொலைக்காட்சி நண்பர்கள் திணற காரணமாக இருந்தது.

அந்த கூட்டத்தில் நின்று கொண்டிருந்தவனுக்கு நடிகை சினேகாவின் அழைப்பு வந்தது. (நான் அவங்க பி. ஆர். ஒ.) போனை எடுத்து காதில் வைத்தவனுக்கு அதிர்ச்சி கொடுத்தார் சினேகா. எங்க இருக்கீங்க... முகூர்த்தம் முடியறதுக்குள்ள வீட்டுக்கு வாங்க என்றார்.

என்ன முகூர்த்தம்? திடீர்னு? சொல்லுங்க என்ன சஸ்பென்ஸ்? என்றேன்..

பேசிக்கிட்டே நேரத்தை வீணாக்காதீங்க... உங்களால எவ்வளவு நேரத்து வீட்டுக்கு வர முடியும்னு சொல்லுங்கன்னார்.

அரை மணி நேரமாவது ஆகும்... ஏன்னா சத்யம் தியேட்டர் ஒரு மூலை. அவங்க வீடு இன்னொரு எண்ட். நா உங்களுக்கு நேத்தே சொல்லியிருக்கணும். சாரி... திடீர் முடிவுங்கறதால அண்ணா எல்லோரும் ஊர்ல இருந்து வந்ததால என்னால ஒண்ணும் பண்ண முடியலை.. அலைச்சல்...

எனக்கு நிச்சயதார்த்தம் ரகசியமா நடக்கு. வாங்க... யாருக்கும் சொல்லாதீங்க. குறிப்பா பத்திரிகைகளுக்கு என்றார். எனக்கு பதற்றம்... என்னடா இது... சினேகா திடீர் திடீர்னு இந்த மாதிரி விளையாடுவாங்க. அது மாதிரியோ என்ற சந்தேகம் வேற....

இருந்தாலும் அவங்களை சுத்தி மந்திரம் ஓதுற சத்தம். விழாவுக்கே உரித்தான சல சலப்பு... சந்தேகமேயில்லாம் இருக்குமோ என்ற பயத்துடன் அடிச்சி பிறக்கி பைக்கை எடுத்து பறந்தேன்... கிராஸ் பண்ணி போன வேகத்துல ,
கூட நின்ன தோழர்கள் மிரண்டு போனாங்க...

போக போக நாலைஞ்சு போனு...

என்னடா இந்த பொண்ணு இப்போதான் நிறைய படங்கள் கமிட் பண்ணி பிசியா இருக்கு... திடீர்ன்னு ஏன் அவசரம்னு தெரியலையேன்னு ஒரு பக்கம்...

சரி நம்மளுக்கு நடிகை கல்யாணமாகி போனா பொழப்பு போயிடுமோன்னு சுயநலமாவே சிந்திக்கிறோமேன்னு இன்னொரு பக்கம்...


இருந்தாலும் வெறுங்கையோடு போனா நல்லா இருக்காதுன்னு ஒரு புலி கம்பீரமா த்ரீ டி எப்பெக்டுல இருக்கிற மாதிரி வாங்கிகிட்டு தெரு முனையில நின்னு வீட்டை எட்டி பார்த்தேன். வெளியில் ஷாமியானா பந்தல். ஏகப்பட்ட அலங்காரம். கார்கள்... ஆஹா.... உண்மை தாண்டி... என்று படபடபோடு இருந்தாலும் சினேகா வீட்டுக்குள்ள இருந்து தம் அடிக்க கடை பக்கம் ஒதுங்கிய
ஒருத்தரை விசாரித்தேன்.

பக்கத்துல இருந்த ஃபேன்சி கடையில ரெண்டு ஸ்டிக்கர் வாங்கி கிஃப்ட் மேல ஒட்டி ஸ்கெட்ச் வாங்கி ஒரு வாசகத்தை கிறுக்கி வாசலுக்குள் நுழைந்தேன். சினேகா வாசலுக்கே வந்து வரவேற்றார். சினிமாவிலுருந்து யாரையும் கூப்பிடலை. ஆனா, உங்களை அப்படி விட முடியாதுன்னுதான் கூப்பிட்டேன்...

பக்கத்துல நின்ன அக்கா சங்கீதாவை கூப்பிட்டு, உள்ள அழைச்சிட்டு போய் மாப்பிளையை அறிமுகம் பண்ணி வை... ஜான் உங்களுக்கு அவரை பிடிச்சிருந்தா தான் கல்யாணம் ஓகே என்று டிரேட் மார்க் புன்னகையை சிந்தினார்.

சரி கிஃப்ட் எனக்கு தானே கொடுங்க என்றார்.. இல்ல என்ன கிஃப்ட்ன்னு நீங்க பார்க்கும் ஆனா அவங்ககிட்ட தான் கொடுப்பேன் என்றேன். சினேகாவின் அம்மாவும், அப்பாவும் அவ்வளவு கூட்டத்திலும் என்னை பார்த்து சிரிச்சாங்.

சரி வாங்க கொடுக்கலாம் என வீட்டுக்குள்ளிருந்த மெயின் ஹாலுக்கு அழைத்து போனார்.

இவங்க தான் இன்னைக்கி மாப்ள... கொடுங்க எங்க சின்ன அன்னிக்கு வளைகாப்பு... என்னா நல்லா ஏமாந்தீங்களா என்று சிரி சிரி என்று சிரித்தார். நான் ஒன்றுமே சொல்லாமல் கொஞ்சம் கிஃப்ட் மேல என்ன எழுதியிருக்கேன்னு பாருங்கன்னு சொன்னேன்...

பார்த்தால் ....

"புலிக்குட்டி
பிறக்க
வாழ்த்துக்கள்"..

என்று எழுதி இருந்ததை பார்த்தும் சினேகாவின் சிரிப்பு கோவமா மாறிச்சி.
சே! எப்படி ஜான் கண்டுபிடிச்சீங்க...

ஏமாத்தலாம்னு நினைச்சனே....

ஃபேன்ஸி கடை வரை ஏமாந்தது எனக்கு தானே தெரியும்.

நீங்களும் ஏமாந்திருந்தா சாரி....

புதன், 6 மே, 2009

இருட்டுக் குடுவை

என் இரகசியங்கள் எல்லாம்
ஒரு
குடுவையில்
அடைக்கப்பட்டு
உன் எதிரில்
இருக்கிறது...

பரிமாற்றங்களின் பேரில்
உண்மையென்று
பொய்யை வெளியிலும்
பொய்யான உண்மையை
உள்ளிலும் பூசி வடிவாகியிருக்கிறது ...

உடைத்தல் ஒல்லாத
ஒரு கடினப் பாறையை
போர்த்திக்கொண்டு
அது மௌனித்திருக்கிறது...

என்னையும்
அந்த குடுவையையும்
மாறி மாறிப் பார்க்கிறாய்...

குடுவையின் மௌனத்தை
மீறி நான் நடுங்குகிறேன்.

குடுவையின் வாய் திறந்து
உள் நோக்கிப்
பாய்வாயோவென்ற
வலி மேலிட
பார்த்திருக்கையில்...

ஆழ் கடலுக்குள்ளதை
வீசிவிட்டு ...
எனக்கான இரகசியமற்ற
ஒரு வெளியை உருவாக்கி கொடு ....

வெள்ளி, 10 ஏப்ரல், 2009

பிச்சை பாத்திரம்

நேரம் இல்லாததால் எழுத முடியவில்லை என்பதை சொல்ல கொஞ்சம் வெட்கமாத்தான் இருக்கு. இருந்தும் அதுதான் காரணம் என்பதும் உண்மை.
கடந்த வாரம் முழுக்க ஹைதராபாத் , கேரளா எ மாநிலம் விட்டு மாநிலம் பாய்ந்து வந்த அலைச்சல். கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது.

எல்லா மனிதர்களையும் நம்ப முடியவில்லை. இந்த பயணத்தில் உண்மையானவர்களாய் நினைத்தவர்கள் பொய்யாகவும், நம்ப முடியாமல் இருந்தவர்கள் நம்பிக்கையுடனும் நடந்து கொண்டது அனுபவமாக இருந்தது.

கடப்போம். இதுவும் கடந்து போகும் என்பது மன நிலையாக வைத்துக்கொள்ள ரொம்ப பொறுமையும் அவசியம்.

ஐந்து லட்சத்திற்கான காசோலை வாங்கிவந்தால் அது பணம் இல்லை என வங்கியிலிருந்து திரும்பி வந்துவிட்டது. இவ்வளவிற்கும் அந்த மனிதனுக்கு என்னாலான நிறைய உதவியும் செய்தேன். நன்றி இல்லை.

ஆனால் இன்னொரு மனிதனை நம்பாமல் இருந்தேன். ஆனால் அவன் நேர்மையாய் நடந்தான்.
இது மாதிரி நிறைய நடந்திருக்கு. இப்போ இதை இங்கே தொ வேற காரணம்.

லக்ஷ்மன் ஸ்ருதி சிக்னல் எனக்கு போகப் போக போதி மரம் மாதிரி ஆயிடும் போல. அந்த சிக்னல் ரொம்ப நேரம் ஆகும்... சிவப்பு க்ரீனா மாற...
நான் மெல்ல பைக்கை நிறுத்தி பெட்ரோல் மிச்சம்
பார்க்க முயன்றேன்.

என் முன் வாகனத்தில் ஒரு குழந்தையுடன் தம்பதி. ரொம்ப சுவாரசியமாக குழந்தையை கவனித்துக்கொண்டிருந்தேன். திடீரென சார் பசிக்குது காசு போடுங்கன்னு சட்டையை பிடிக்காத குரல்கள், பின்னாடியே இன்னும் நாலைந்து பேர். பார்க்கவே மனசிரங்கும் வித விதமா தோற்றத்தில் இருந்தார்கள். சிக்னல் விழுந்துவிடுமொவேன்ற பயத்திலும் வேக வேகமா சில்லறைகளை தேடி சத்தம் கேட்க போட்டுக்கொண்டிருந்தார்கள் வாகன வாசிகள். சத்தம் கேட்காமல் போட்டவர்கள் பெருமிதத்துடன் மற்றவர்கள் முகம் பார்த்தார்கள்.
சிலர் உள்ளுக்குள்ளேயே கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தார்கள் போடலாமா? வேண்டாமா? என்று...

என்னை பொறுத்த வரையில் யாராவது ஏதாவது கேட்டால் நாம் கொடுக்காதிருப்பதே பாவம் என்று நினைப்பவன். காரணம் அந்த யாசகம் கேட்கும் நிலையில் கடவுள் நம்மை வைக்கவில்லையே என்ற நன்றி காட்ட ...

கேட்பதைவிட கொடுக்கமலிருப்பதே மிகப்பெரிய கேவலம் என்பதை சிறிய அளவில் பின்பற்றுவதுண்டு.

பெரிய தான தர்மம் செய்பவன் என நினைக்க வேண்டாம்.

ஒரு கவிதை எழுதி இருக்கேன்...

"பிச்சை போட மனசிருக்கு-
ஆனால் பிச்சைஎடுப்பவன்
தட்டில் கூட ஒரு ரூபா இருக்கு "

சில சமயம் ஒரு ரூபா காசில்லாம பக்கத்தில யாராவது வந்து நின்னா மனசு பதறும் பாருங்க. ரொம்ப அருவருப்பா இருக்கும்.

இருந்தால் செய்வது வழக்கம். அன்று வழக்கத்துக்கு மாறாக காசிருந்தும் போட மனசில்லை...

அந்த நாள் ரொம்ப கொடுமையானது தான்.

அந்த குழந்தை வைத்திருந்த பெண் என்னை ஏதோ மாதிரி பார்த்தாள்.

அதற்கு முந்தைய நாள் நடந்த ஒரு காட்சி தான் காரணம்.
பெர்பெக்ட் நடிகர்கள் அவர்கள் தான். நல்ல கரியை எடுத்து சட்டையிலும், முகத்திலும் கருப்படித்த மேக்கப். கால்களில் துணியை எடுத்து சுற்றி கையில் ஒரு கம்புடன் அவர்கள் நடிக்கும் நடிப்பு... கமல் ஃபூ..
கார் பிளிறிக்கொண்டு அருகில் வந்தாலும் அதே நடிப்புடன் அசைய மாட்டார்கள்...
பல நாட்களாக நானும் பரிதாப பட்டு போட்டிருக்கிறேன். நேற்று உண்மை அறியும் வரை. லக்ஷ்மன் ஸ்ருதியில் பார்த்த அவர்களை ஒரு தெரு தள்ளி நேற்று கருக்கலில் பார்க்க நேர்ந்து விட்டது. அதே மக்கள் நொண்டியும் நொடமுமா பிச்சைஎடுத்தவர்கள் ஆளுக்கு ரெண்டு வாட்டர் பாக்கெட் வாங்கி முகம் , கை, கால் கழுவி பிரெஷ் ஆகிக்கொண்டிருந்தார்கள். அருகே ரெண்டு பேர் பிச்சை எடுத்த காசு பங்கு பிரிக்க வாக்குவாதம் பண்ணிக்கொண்டிருந்தார்கள் !

நான் அந்த பக்கம் கிராஸ் செய்தவன் ஷாக் ஆகி வண்டியை நிறுத்தினேன். போனை எடுத்து காதில் வைத்துக்கொண்டு கவனிக்க தொடங்கினேன். வாக்குவாதம் சண்டையாக கட்டி புரண்டார்கள். வண்டியை விட்டு இறங்கி போயி ரெண்டு பேரையும் இழுத்து விட்டேன் அறை... என் பக்கம சேர்ந்து திரும்பினார்கள்..

ஓத்தா... எந்த ஊருடா உங்களுக்கு? இளிச்ச வாயங்களாடா நாங்கள்லாம்.. அடுத்த ரோட்டுல பிச்சை எடுப்பீங்க.. இங்கே வந்து மேக்கப்ப கலைப்பீங்களாடான்னதும்... நிக்கவேயில்ல அஞ்சு பெரும் ஓட ஆரம்பிச்சாங்க..

இப்போ என்ன கேவலமா பாத்த அந்த பொண்ணு கிட்ட இந்த சம்பவத்தை எப்படி சொல்ல?

சைடுல நாலைந்து பேரை முடிச்சிட்டு அந்த பொண்ணை தாண்டி எம் பக்கமா வந்தான். சீக்கிரமா என்ன அடையாளம் தெரியல.. பக்கத்தில நெருங்கி வந்தவனுக்கு லேசா அடையாளம் புரிய, பதட்டம் வேகமா முகத்துல பரவ ஆரம்பிச்சது. அதற்குள் நானும் பைக்கை ஸ்டாண்ட் போடற மாதிரி இறங்கிக்கொண்டே "நேத்து விட்ட அறை வேணுமான்னு" கேட்டது தான் தாமதம் நொண்டினவன் கொஞ்சம் வேகமா நடையை போட்டான்.

இப்போ பிச்சை போட்ட அந்த பொண்ணு ஷாக். என்ன இவ்வளவு நேரம் பயங்கரமா நொண்டினவன் வேகமா நடக்கானேன்னு... அங்கே பிச்சை எடுத்த பசங்க யாருமே இல்ல.

வேதனை...

சல்லிக்காசுக்கு மனிதாபிமானத்தை அடகு வைக்கும் செயல்.
நான் பிச்சை எடுப்பவர்கள் மேல வச்சிருந்த ஈரம் ரொம்ப கடுமையாக சுட்டது.

பி. கு. எல்லாரும் அப்படி இருக்கப்போவதில்லை. வயதானவர்கள் யாராக இருந்தாலும் சாப்பாடு வாங்கி கொடுங்கள். அதை யாரும் இந்த கட்டுரையினால் நிறுத்த வேண்டாம்










ஞாயிறு, 22 மார்ச், 2009

மானங்கெட்ட பொழப்பு!

குதிரை பேரங்கள் தொடங்கியாச்சி... கட்சிகள்... காட்சிகள் ... மாற்றம் அரங்கேறும் இனி...
இங்கேயிருந்து அடுத்த கிளைக்கு தாவுவதும், கிளைக்கு கிளை தாவுவதும் சகஜம். எதற்கு? நாட்டுக்கு நன்மை செய்யவா? போங்கப்பா.. காமெடி கீமெடி பண்ணாதீங்க...
யாரை தேர்வு செய்தாலும் என் நாடு கவலைப்படப்போவதில்லை... ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எங்களுக்கு அவசியமா என்ன?
எங்கள் தினம் -தினம் தொடங்கும். காலை அஞ்சு மணிக்கு எந்திச்சு பால்காரனை துரத்துவதிலிருந்து தொடங்கும்.
குளித்து எங்களை அலங்காரம் செய்து கொள்வோம். அலுவலகம் தேடிதேயத் தேய உழைப்போம் .
இந்த அரசியல் ஆர்வமெல்லாம் நாளிதழ்களோடு போய் படுத்துக்கொள்ளும்.
நாங்கள் முட்டாள்களா? இல்லை முட்டாள்களாக இருந்துகொள்ள முனைகிறோம்.
சமூக அக்கறை காற்றோடு போய் ரொம்ப வருசமாச்சு.
குடும்ப அக்கறை மட்டும் உண்டு. பொண்டாட்டி புள்ள நல்லா இருக்கணும். போதும்... இதுதான் இன்றைய மன நிலை.. நேற்று நாடு நல்லாயிருக்க குடும்பம் செத்த பல பேர்...
இன்று தடம் மாறி
குடும்பம் போதுமென சுய முகங்கள் மட்டுமே மேலோங்கி போனதற்கு காரணம் யாவரும் அறிந்ததே..
அறிந்தும் அறியாமல் செல்லும் காரணம் எதுவும் மாற்ற முடியாது எனும் நிலையா?
மனித வாழ்க்கையின் குறைந்த பட்ச நாட்களில் பணம் பதவி, ஆளுமை, ஈகோ, வசதிகள் மட்டுமே முன் நிற்கின்றன... ஆதலின், பின் நிற்பவர்கள் நிராதரவாகத்தான் இருக்கிறார்கள். மாற்ற போராட்டங்கள் எங்கேயும் இல்லை... அரசியல் கண் துடிப்பு பிரபகண்டாக்களைத் தவிர எந்த ஒரு மக்கள் போராட்டங்களும் நினைவிற்கு மறந்தே போனது.
அப்படியிருக்கும்போது மக்களின் எதிர் எண்ணங்களைப் பற்றி இங்கே எந்த அரசியல் தலைவர்களும் கவலைப்படப்போவதில்லை.
இங்குதான் எல்லாம் பழகிப்போய்விட்டதே...
போலீசா லஞ்சம் வாங்கும்... அரசியல் வாதிகளா கொள்ளை நிச்சயம் போன்ற எண்ணங்கள் மக்களோடு கலந்துவிட்டது...
இது பலருக்கு வசதியாகப் போய்விட்டது.
மகன் புகை பிடிப்பதை பார்த்துவிட்டால் தெரியாத மாதிரி போய்விட்டால் நல்லது. அல்லது மகன் நாளை நம் கண் முன்னாடியே தம் அடிப்பான். பயம் போய்விடும்.
அது மாதிரி இன்று குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு பயம் போய்விட்டது. சுய ஒழுக்கம், கட்டுக்கோப்பு பெரிய விசயமாக இல்லை.
ஆக, குற்றங்களுக்கு துணை போகும் அல்லது கண்டும் காணாமல் போகும் சமூக பொறுப்புணர்வு அற்ற நிலை. எந்த கடமை என்றாலும் எப்படியோ வேலை நடந்தால் சரி என்ற போக்கு?

அதுபோல் நாளை நடக்கப்போகும் தேர்தல் குதிரை பேரங்களில் யாருக்கும் எந்த கவலையும் இருக்கப்போவதில்லை. இந்த தடுமாற்றங்களுக்கு எந்த மாற்றமும் வரப்போகும் தேர்தல் கொண்டு வரப்போவதில்லை.
கண் மூடி ஓடும் எம் மக்கள் மாக்களாகி வெகு காலம் ஆயிற்று. அரசியல் சாக்கடை என ஒதுக்கி வைத்த கொண்டாட்டம் உங்களுக்கு உண்டு. எந்த கட்சியிலிருந்தும் நீங்க எங்கும் போகலாம். வரலாம்.
ஓட்டா? கவலையே வேண்டாம் எண்கள் கடமையை செய்வோம் உங்கள ஜெயிக்க வைப்போம்.
ஆனால் மறந்து விட வேண்டாம் உங்கள் மீது உமிழ எச்சில்கள் சேமிக்கப்படுகின்றன.
ஈரம் சுடும் காலம் வரும் நண்பர்களே!
எல்லா புரட்சிகளும் ஓர் இரவில்தான் பூத்திருக்கின்றன.



சனி, 21 மார்ச், 2009

சும்மா ஒரு நடை!

இன்னும் கிராமம் இருக்கு சாமி!



















சுடும் ஈரம்

நெடுநாளா எழுத முடியாமல் போயிற்று.

இன்று நண்பர் ஒருவர் உதவியுடன் வலைப்பூவுக்குள் வந்துவிட்டேன்.

பெரிய எழுத்தாளன் இல்லை.. என்ன எழுத என்ற பின்குறிப்பும் இல்லை.

அதிகபட்சம் இது என் டைரியாகவோ அல்லது எனது புலம்பல்களாகவோ இருக்கலாம்.

இருக்கட்டும் எதுவாயினும்!

தொடங்கலாம்... முதலில்.

சுடும் ஈரம்!

வேகமான வாகனங்கள்... புழுதி பறக்கும் சென்னையின் சாலைகளில் நானும் ஒருவன். சென்னையில் ஏது புழுதி என்று கேட்கக் கூடாது. கிராமத்தில் கூட அவ்வளவு புழுதி கிடையாது. (ஏன்னா அங்க மாநகராட்சி மாந்தர்களின் குழி பறிக்கும் வேலை இல்லை) .

புண்ணியம் செய்த இந்த பூமியில் நமக்கு படியளக்கும் புண்ணியவானை பார்க்கும் வேகத்தில் இரு சக்கர வாகனத்தில் பறந்தேன். வடபழனி லக்ஷ்மன் ஸ்ருதியை கடந்துவிட்டால் ஏழு கடல் தாண்டிய மாதிரி.. அந்த ஏரியாவில் மொத்த வேகம் கூட்டினாலும் நத்தை மாதிரிதான் நகரமுடியும்.

ரோமியோக்களின் பைக்குகளுக்குமட்டும் என்ன ரெக்கையா முளைச்சிருக்கு.? பறக்குது. நானும் முண்டியடிச்சு அவனை முந்தி போயிடணும்னுதான் பாத்தேன். நடக்கல. நம்ம வண்டியில குதிரைத்திறன் கம்மி.ரெண்டு பேர் வண்டியில் போனாங்கன்னா பின்னாடி இருக்கிறவன் மேல எப்பவும் எனக்கு ஒரு கண்ணு இருக்கும். அவசரத்துல கொஞ்சம் மிஸ் பண்ணிட்டேன்.

பான் பராக்கை போட்டு துப்புனாம் பாருங்க. அவ்வளவு எச்சிலை தேக்கி வைக்க வாயி என்ன மிளகா வத்தல் குடோனா? அடிச்சது சாரல். நனைந்தேன் நானும் கொஞ்சம். தொடர்ந்து வந்த பத்து பேர் திட்டுறது அவன் காதுல ஏறவே இல்ல. அவன் வாயக் கழுவுன போதையில இருந்தான்.

நம்ம உள்குதிரை குதித்தது. கனைத்தது வாகனம். ஒரு வளைவில் முந்தினேன். சரியாக அவன் இடது புறம் நெருங்கி வர எச்சில் கூட்டி உமிழ்ந்தேன்.முகத்தில் சாரல் அடித்ததால் வெளிறி பார்த்தான் என்னை.

டேய் மயிரூ! நீ துப்புன கோவத்துல அந்த ஆளு எம் மேல துப்பிட்டு போறான் பாருங்க்ற சத்தம் மட்டும்கேட்டுச்சி.

ஈரம் சுடும்!